காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா புரிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் - சரஸ்வதி தம்பதியினர். இவர்களது மகன் உமாபதி வயது 17. கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க அருகில் உள்ள வளத்தூர் கிராமத்திற்கு சென்று உள்ளார். வளத்தூர் கிராம குளத்தில் குளித்த பொழுது நண்பர்களுக்குள் நீச்சல் போட்டி நடைபெற்று உள்ளது.
குளத்தின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச் சென்ற பொழுது உமாபதி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் குளத்தில் இறங்கி முக்கால் மணி நேர தேடுதலுக்குப் பிறகு சிறுவன் உமாபதியை மீட்டு எடுத்தனர்.உமாபதியை சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உமாபதி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சிறுவன் உமாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை நாளில் குளிக்கச் சென்ற சிறுவன் குளத்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் புரிசை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்