டிசம்.,14 ல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்.,15 ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதனமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால். தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலையும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசான மழையும் இருக்கும். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது, கடலோர தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


(13.12.2021) புதுச்சேரி மற்றும் காரைக்கால். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


டிசம்.,15 ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


டிசம்.,16 ம் தேதி தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலையும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசான மழையும் இருக்கும்.







சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32°C மற்றும் 25°C ஆக இருக்கும்.


அடுத்த 48 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32°C மற்றும் 25°C ஆக இருக்கும்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண