தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:


இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


ஜனவரி 18ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


 






சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிளவக்கல் 5 செ.மீ., தென்காசி 4 செ.மீ., ஆரணி, பள்ளிப்பட்டில் தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.


 






 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண