கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகிறது.

காணும் பொங்கல் - கடற்கரைக்கு வர வேண்டாம்

இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணும் பொங்கல் அன்று மக்கள் வெளியில் சென்று அந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். கொரோனா முழு ஊரடங்கால் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், காணும் பொங்கல் களையிழந்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

 

முழு ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி மற்றும் தடை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

எதற்கெல்லாம் அனுமதி

 * உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

* ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.

* உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி

* நாளையும், வார நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி.

* திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி.

* பால், பேப்பர் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி

* போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு அனுமதி

* விமானம் மற்று ரயில் நிலையம் நிலையங்களுக்கு வாடகை மற்றும் சொந்த வாகனங்கள் பயன்படுத்த அனுமதி

எதற்கெல்லாம் தடை மற்றும் இயங்காது

* பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது

* மின் வணிக நிறுவனங்கள் செயல்பட தடை 

* அத்தியாவசிய பணியாளர்களுக்காக குறைந்தளவில் மின்சார ரயில்கள் இயங்கும்

* ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது

* மார்க்கெட், பீச், பார்க், மால்கள் இயங்காது

* வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு தடை

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண