அடுத்த 3 மணி நேரத்தில் மழை:


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, புதுக்கோட்ட, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


காற்றழுத்த தாழ்வு பகுதி


கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 13.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  14.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


பாரூர் (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), காஞ்சிபுரம்  தலா 9, கறம்பக்குடி (புதுக்கோட்டை), செய்யூர் (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 8, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 7, மரக்காணம் (விழுப்புரம்), செங்கல்பட்டு, விழுப்புரம்,, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஆவடி (திருவள்ளூர்) தலா 6, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருக்கழுகுன்றம் (தஞ்சாவூர்), அரியலூர்,  கேவிகே காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), கிருஷ்ணகிரி, கொள்ளிடம் (மயிலாடுதுறை), கடலூர் (கடலூர்), தொழுதூர் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 5 மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


13.12.2022: லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


14.12.2022:  லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


15.12.2022 & 16.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.