அமராவதி ஆற்றில் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.




திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் வினாடிக்கு 935 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 89.51 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பெய்தது.


கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு முன்தினம் காலை வினாடிக்கு 1,477 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 2,173 கன அடியாக அதிகரித்தது.


மாயனூர் கதவணை


காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 731 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து 986 கனடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் சம்பா சாகுபடி பணிக்காக 14,186 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய் காலில் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.




ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு வினாடிக்கு 42 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.24 அடியாக இருந்தது.  பாசன வாய்க்காலில் வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


நங்காஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால்  நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது.


பொன்னணி ஆறு அணை


கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 27.87 அடியாக இருந்தது.


கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை.


கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை  விடிய விடிய மழை பெய்தது. வங்க கடல் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9 தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மேலும் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி வரை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாகவும் அவ்வப்போது வெயிலும் அடித்தது.




மழை நிலவரம்.


கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம், அணைப்பாளையம் 3.6, கா. பரமத்தி 1.2 கிருஷ்ணராயபுரம்3,  மாயனூர் 5,  பஞ்சப்பட்டி 2.6,   பால விடுதி 5.2, ஆகிய அளவுகளின் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 1.72 மில்லிமீட்டர் மழை பதிவானது.