தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.


புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் டிசம்பர் 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தெற்கு வங்கக் கடலின் மத்தியப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது 3 நாள்களில் இலங்கையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


இதேபோன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


20.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் இன்று காலை வரை அதன் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் & தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில் வரை வீசக்கூடும்.


இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்:  18.12.2022  முதல் 20.12.2022 வரை :  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும்.


மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.