வெண்ணிலா கபடிக்குழு' படத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் பரோட்டாவுக்கு பல மவுசுகள் இருந்திருக்கலாம். ஆனால் அந்தப்படம் வெளிவந்த பிறகு பரோட்டா என்றால் உடனடியாக பலரது நினைவிலும் வந்தவர் சூரி.. இல்லை, இல்லை, பரோட்டா சூரி. மிகவும் எதார்த்த சினிமாவாக வந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் இன்னும் எதார்த்தமாக வந்தவர் சூரி. முதல் படத்திலேயே தன்னுடைய டயலாக் டெலிவரி மூலமே கவனிக்க வைத்த சூரி, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நாயகன். அதுமட்டுமல்ல, நாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் சூரி.








சினிமா உலகில் நகைச்சுவை நடிகரா இருந்தாலும், ரியல் லைப்ல சூரி ஒரு ரியல் ஹீரோ தான். பல்வேறு இடங்களிலும் உதவி செய்துவருகிறார்.  கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். வாழ்க்கையில் பன்முக தன்மை கொண்டவராக வலம் வரும் சூரி பல உதவிகள் செய்துவரும் சூழலில் அவரது ரசிகர்களும் தொடர்ந்து உதவி செய்துகொண்டிருக்கின்றனர்.





இந்நிலையில் மதுரையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் நடிகர் சூரியின் ரசிகர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். மதுரை கே.கே.நகர் பகுதியில் நடிகர் சூரியின் சகோதரர்  லெட்சுமணன் மற்றும் ரசிகர்கள் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளோடு கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும், அதனை அவர்களுக்கு ஊட்டி விட்டும் மகிழ்வித்தனர். மேலும் அவர்களுக்கு பென்சில், ஸ்கெட்ச், மற்றும் மேஜிக் ஷோ செய்து காட்டி மகிழ்வித்தனர்.