தமிழ்நாட்டில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்திலும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதியும்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும், தரைக்காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுலாம் என்றும் கூறியுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 5 செ.மீ., ஏலகிரி, பவானிசாகர், சேலத்தில் தலா 4 செ.மீ, கூடலூர், பென்னகரம், தளியில் 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்சமாக 84 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறியுள்ளது.


தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாகவும், மேலடுக்கு சுழற்சி வரும் 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாகி பின்னர் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இன்றும் நாளையும் தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் மே 8 வரை கடலுக்கு செல்ல வேண்டான் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண