வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்டோபர் 13) நீலகிரி, கோயம்புத்தூர்,ஈரோடு, சேலம், கடலூர்,  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய  வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.


நாளை (அக்டோபர் 13ஆம் தேதி) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நாளை மறுதினம் (அக்டோபர் 15ஆம் தேதி) நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும்., ஈரோடு, கன்னியாகுமரி, தர்மபுரி,சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  திருவள்ளூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.


வரும் அக்டோபர் 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும்,கன்னியாகுமரி, தர்மபுரி,சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், அரியலூர் பெரம்பலூர் , திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 



அக்டோபர் 17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 


 



01.10.2021 முதல் 13.10.2021 வரை பெய்த மழை அளவு


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


குறிப்பு : அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 15 ஆம் தேதி ஆந்திர - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக் கடல் பகுதிகள்


அக்டோபர் 14 முதல் 16 வரை தென் மேற்கு வங்க கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்


அக்டோபர் 13 முதல் 15ம் தேதி  வரை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 


எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  



மேலும், வாசிக்க: 12 மணி நிலவரம்: திரும்பிய திசையெல்லாம் திமுக... ஆட்டம் கண்ட அதிமுக... விண்ணை முட்டும் விஜய்... மற்றவர்கள் பூஜ்ஜியம்! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண