விழுப்புரம் மாவட்டம் கோனூர் அருகே குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியதால், கோயில் மணியை நான்கு பெண்கள் சேர்ந்து 4 மணி நேரம் அடித்து நியாயம் கேட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம்  கோனூரைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர், தனது வீட்டை அம்பிகா என்பவருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். இதற்கான தொகையையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில்,  ட்அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியாது என்றும், அந்த வீட்டை திரும்ப ஒப்படைக்குமாறும் குப்பமாளின் கணவர் கிருஷ்ணன் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, வேதனை அடைந்த வீட்டில் வசித்த நான்கு பெண்கள் அருகே உள்ள கோயில் மணியை நான்கு மணி நேரம் அடித்து நியாயம் வழங்குமாறு முறையிட்டுள்ளனர். பணத்தையும் கொடுத்துவிட்டு, பத்திரப்பதிவு செய்யாததால் தொடர்ந்து மணி அடித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் சத்தம் கேட்டு மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்தார். கிரயப் பத்திரத்தை கொண்டு வந்தால், பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதன்பிறகே, நான்கு பெண்கள் மணியை அடிப்பதை நிறுத்தினார்கள். இந்த சம்பவத்தால்   சுமார் நான்கு மணி நேரம் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.


மேலும் செய்திகள் படிக்க: