தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக , தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் கனமழை:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை அளவு:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதிகளில் 8 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

ஒகேனக்கல்லில் குளிக்க தடை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பேரிடரை எதிர்கொள்ள தயார்:

மழைக்காலங்களில் பேரிடரை எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண