வர்த்தக சின்னம் மீறல் தொடர்பான வழக்கில் மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


போன் பே செயலி தன் வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளதாகவும் அச்சின்னத்தை மொபைல் பே பயன்படுத்தியதாகவும் தெரிவித்தது. ஆனால், ஆகஸ்ட் 29 ம் தேதி மொபைல் பேயின் வர்த்தக சின்ன பதிவு விண்ணப்பம் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போன் பே வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து மொபைல் பே செயலியை அகற்ற கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும், UPI, BHIM வசதியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் போன் பே குழுமம் தெரிவித்திருந்தது. 


இதையடுத்து, போன் பே தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போன் பே செயலி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி மொபைல் பே செயலி பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்க இடைக்கால தடை விதித்தார்.