ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வின் உத்தேச விடைக் குறிப்புகளை ஆசிரியர்‌ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் எவ்வாறு ஆட்சேபிக்க வேண்டும் என்று பார்க்கலாம். 


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதாவது:


''தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022 ஆம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கைப் படி ஆசிரியர்‌ தகுதத் தேர்வு தாள் 1-ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) 14.10.2022 முதல்‌ 19.10.2022 வரை காலை / மாலை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டன. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக் குகுறிப்புகள்‌ (Tentative Key Answers) ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளமான http://www.trb.tn.nic.in ல்‌ வெளியிடப்பட்டுள்ளன.


தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேதியில்‌ எந்த அமர்வில்‌ (Session) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள்‌ வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்பிற்கு இணைய வழியில்‌ ஆட்சேபனை (objection) தெரிவிக்கும்‌ போது உறிய வழிமுறைகளை தவறாமல்‌ பின்பறறி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்‌. சான்றாவணங்கள்‌ இணைக்கப்படாத முறையீடுகள்‌ பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவை அனைத்தும்‌ முற்றிலுமாக நிராகரிக்கப்படும்‌.


31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின்‌ மீது தேர்வர்கள்‌ ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர்‌ 28.10.2022 பிற்பகல்‌ முதல்‌ 31.10.2022 பிற்பகல்‌ 05.30 மணி வரை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில்‌ மட்டுமே ஆதாரங்களுடன்‌ பதிவு செய்திடல்‌ வேண்டும்‌. 


அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம்‌ மட்டுமே அளிகக வேண்டும்‌. கையேடுகள்‌ (Guides, Notes) ஆதாரங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தபால்‌ அல்லது பிறவழி முறையீடுகள்‌ ஏற்கப்பட மாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்‌. மேலும்‌, பாட வல்லுநர்களின்‌ முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது''.


இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 




டிஆர்பி குறித்த அறிக்கையை முழுமையாகக் காண: http://www.trb.tn.nic.in/TET_2022/28102022/msg.htm


ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைக் குறிப்பை http://www.trb.tn.nic.in/TET_2022/28102022/msg%20TK.htm என்ற இணைய முகவரியில் காணலாம். தேர்வு எழுதியவர்களுக்குத் தேதி வாரியாகத் தனித்தனியாக விடைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின்‌ மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள்‌,  https://ot_trbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். அதில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு எழுதிய தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டியது அவசியம் ஆகும்.