Tamil Nadu 10th 11th Results: 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்தனர். இந்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


முன்னதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிகள் மே 5ஆம் தேதியும், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிகள் மே 17ஆம் தேதியும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு தள்ளி வைத்தது பள்ளிக் கல்வித்துறை.


மே 8 அன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


இதனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மே 8 காலை 9.30 மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில், சற்றே தாமதமாக தேர்வு முடிவுகள் 10.05 மணியளவில் வெளியாகின.


12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில், மே 17ஆம் தேதியன்றே தேர்வு முடிவுகள் வெளியாகும், சூழல் சரியில்லாதபட்சத்தில் மே 19ஆம் தேதி 10, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10 ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17- அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.


பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?


ஏப்ரல் 20ஆம் தேதி அன்று சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது.


இதன்பிறகு மே 17ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மே 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்தார்.


இதையடுத்து, பொதுத் தேர்வுகளை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மாணவர்கள்


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in 


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்