SIR Voter List: விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருகோவிலூர் என ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

Continues below advertisement

சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருகோவிலூர் என ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 15,லட்சத்து 44 ஆயிரத்து 625 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்வாக்காளர் 7 லட்சத்து 64 ஆயிரத்து 377 வாக்காளர்களும்பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 80 ஆயிரத்து42 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 206 பேர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் இருந்த 17லட்சத்து 27 ஆயிரத்து 490 வாக்காளர்களில்1லட்சத்து 82 ஆயிரத்து 865 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் :

  • இறப்புபினால் 67 ஆயிரத்து 182 நீக்கம் 
  • தொடர்பு கொள்ள முடியாத நிலை வாக்காளர் 13,740 நீக்கம் 
  • மாற்று இடத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் 93 ஆயிரத்து 608 பேர் நீக்கம் 
  • ஏற்கனவே பதிவு செய்தவர்கள் 7998 நீக்கம் 
  • இதர காரணங்களுக்காக 337 பேர் நீக்கம் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 865 பேர் நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர். 

ஏற்கனவே வாக்கு சாவடி மையங்கள் 1906 ஆக இருந்தது 2166 வாக்கு சாவடி மையங்களான அதிகரிக்க பட்டுள்ளன. 

செஞ்சி தொகுதி

செஞ்சி தொகுதியில் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 632

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் :

  • ஆண் வாக்காளர் 116444
  • பெண் வாக்காளர் 118448 
  • மாற்று பாலினத்தவர் 28 
  • மொத்தம் வாக்காளர்கள் 234920
  • நீக்கம் செய்யப்பட்டவர்கள்
  • மொத்தமாக நீக்கம் 25702
  • நீக்கம் சதவிகிதம் 9.86

மயிலம் தொகுதி (71)

மயிலம் தொகுதியில் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 19ஆயிரத்து 553

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 

  • ஆண் வாக்காளர் : 101237
  • பெண் வாக்காளர் : 101270
  • மாற்று பாலினத்தவர் : 21
  • மொத்தம் வாக்காளர்கள் : 202528
  • நீக்கம் : 17025
  • நீக்கம் சதவிகிதம் 7.75

திண்டிவனம் 

திண்டிவனம் தொகுதியில் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 279

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 

  • ஆண் வாக்காளர் 104327
  • பெண் வாக்காளர் 107755 
  • மாற்று பாலினத்தவர் 15
  • மொத்தம் வாக்காளர்கள் 212097
  • நீக்கம் 24182
  • நீக்கம் சதவிகிதம் 10.23

வானூர்

வானூர் தொகுதியில் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 110 

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 

  • ஆண் வாக்காளர் 99964
  • பெண் வாக்காளர் 103703 
  • மாற்று பாலினத்தவர் 16 
  • மொத்தம் வாக்காளர்கள் 203683
  • நீக்கம் 31427
  • நீக்கம் சதவிகிதம் 13.37

விழுப்புரம் 

ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 318 ஆகும்.தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் ;-

  • ஆண் வாக்காளர் : 114742
  • பெண் வாக்காளர் : 120270
  • மாற்று பாலினத்தவர் : 71
  • மொத்தம் வாக்காளர்கள் : 235083
  • நீக்கம் : 31235
  • நீக்க சதவிகிதம் : 11.73

விக்கிரவாண்டி 

ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 712தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 

  • ஆண் வாக்காளர் : 109977
  • பெண் வாக்காளர் : 112791 
  • மாற்று பாலினத்தவர் : 28
  • மொத்தம் வாக்காளர்கள் : 222796
  • நீக்கம் : 21916
  • நீக்க சதவிகிதம் : 8.96

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தொகுதியில் ஏற்கனவே இருந்த வாக்காளர்கள் மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 896தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 

  • ஆண் வாக்காளர் : 117686
  • பெண் வாக்காளர் : 115805 
  • மாற்று பாலினத்தவர் : 27
  • மொத்தம் வாக்காளர்கள் : 233518
  • நீக்கம் : 31378
  • நீக்க சதவிகிதம் : 11.85 

மொத்தமாக 1 லட்சத்து 82 ஆயிரத்து 865 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக நீக்க சதவிகிதம் 10.59 ஆகும்.

 

TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?