அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்:


தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள், இளைஞர்களுக்கு உருவாகும் வேலைவாய்ப்புகளை கெடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.


வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்” சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விட்டிருக்கிறார், இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் தெர்வித்தார்.


பொய் அறிக்கை:


வேதாந்தா, பாஸ்கான் நிறுவனங்களின் முதலீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் சென்று விட்டதாக, எடப்பாடி பழனிசாமி அறியாமையில் அறிக்கை விட்டிருக்கிறார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் திட்டங்களை தனியாகச் செயல்படுத்திட பாஸ்கான் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. முன்பு போல் அல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாகவும் சீராகவும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை கெடுக்க வேண்டாம் எனவும் இபிஎஸ் -க்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.  


இபிஎஸ் குற்றச்சாட்டு:


திமுக அரசால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய்  விரட்டி அடிக்கப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாடு மக்களின் நலனை அடகு வைப்பது தொடர் கதையாகி வருவதாகவும், வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்ததாகவும்  தெரிவித்திருந்தார். திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதாகவும், இதன் காரணமாக, மராட்டிய மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பதாகவும். மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.


இதன் காரணமாக, மராட்டிய மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமால் போனதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண