காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

வங்கக் கடலில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று தென்மேற்கு வங்கக்கடலில்‌ இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ சற்றே வலுப்பெற்று தமிழகம்‌, புதுவை கடற்கரையை நோக்கி 10- 12 தேதிகளில்‌ நகரக்கூடும்‌. 

ஆகையால், இன்று14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை 3 மாவட்டங்களில் அதி கன மழை வாய்ப்புள்ளது. இதனால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

16 மாவட்டங்கள்:

திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌ ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை 32 மாவட்டங்கள்:

தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபரம்‌, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 24-25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌'' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Red Alert: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 16 மாவட்டங்களுக்கு கன மழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை