உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்துவருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்த்துகள் பின்வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி:
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனைவருக்கும் போதிக்கும் நன்னாள் கிறிஸ்துமஸ் திருநாள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் திருப்பி காட்டு என்ற சகிப்புத்தன்மை, அகிம்சையையும்; பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என்ற உயர்ந்த அன்பை போதித்தவர் இயேசு பிரான்.
அனைவரும் சமம் என்ற சமத்துவ கொள்கை கிறிஸ்துமஸ் நாளன்று மிளிர்வதை காண்கிறோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இந்த நாளை கொண்டாட வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்), எடப்பாடி பழனிசாமி ( இணை ஒருங்கிணைப்பாளர்):
பகைவர்களிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
கிறிஸ்துமஸ் நாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம், செழிப்பு, சமாதானம், நல்வாழ்வு தழைத்தோத்திட வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:
மிகச்சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்துவரும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
மண்ணில் மனிதநேயம் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் கிறிஸ்துமஸ் நாளில் அனைவரும் சூளுரைப்போம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
வைரஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம்
அமமுக பொதுச்செயலாள டிடிவி தினகரன்:
உலகமெங்கும் அமைதி நிலவி, அனைவரிடமும் ஆரோக்கியமும் அன்பும் நிறைந்திட கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துகிறேன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்:
இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு, அமைதி ஆகிய மாண்புகளை உறுதியோடும், நம்பிக்கையோடும் கடைப்பிடிப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்