புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சரியாக 12 மணிநேரம் மட்டுமே உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


இந்தநிலையில், புத்தாண்டு பிறக்கும் இரவு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 


புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 10 மணி முதலே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும், சென்னை முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள காவலருக்கும் உரிய அறிவுரைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 


முன்னேற்பாடுகள்:



  • கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்களை தடுப்பதற்காக, பெரிய மேம்பாலங்கள் மூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை மாநகரங்களில் உள்ள 40க்கு மேற்பட்ட மேம்பாலங்களின் நுழைவு மற்றும் இறங்கும் பகுதிகளில் தடுப்புகளை அமைக்க இருக்கின்றனர்.

  • சென்னையில் உள்ள அண்ணாசாலை, மெரினா கடற்கரை, ஈசிஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் சாமியானா பந்தல் அமைத்து வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

  • புத்தாண்டு இரவு மற்றும் அதிகாலையில் சென்னையில் 20 ஆயிரம் காவல்துறையினரும், தமிழ்நாடு முழுவதும் 1 லைட்சம் காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். 


தீவிர கண்காணிப்பு:


முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாகக் கண்காணிக்கப்படும். ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. கொண்டாட்டத்திற்கு மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் 80% அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.