சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில், காவல் துறையினருக்குக் குடியரசு தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பேசிய ஸ்டாலின், காவல் நிலையத்தில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு தரப்படுகிறது என்றார். நாட்டிற்கே முன்மாதிரியான காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை திகழ்வதாகவும் டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: Today Headlines : காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியர்கள்.. இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
இந்தியாவிலேயே பெண்களுக்கு காவல்துறையில் முன்னுரிமை வழங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விரிவாக பேசிய அவர், "தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறைக்கில்லை தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை இது. இரவு பகல் பாராமல் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்த காவலர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. 2009ஆம் ஆண்டு, குடியரசு தலைவரின் கொடியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு காவல்துறைக்கு பெற்று தந்தார்.
160 ஆண்டு கால கடின உழைப்பிற்கான அங்கீகாரம் இது. தமிழ்நாட்டில் அமைதி நிலவ காவல்துறை செயல்பாடுகளே காரணம். காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் இல்லை. தமிழ்நாடு காவல்துறை முன்னோடி மட்டுமல்ல. முன்னணியிலும் உள்ளது.
இதை மிஸ் பண்ணாதீங்க: Attendance Registration : ஆசிரியர்களுக்கான வருகை பதிவு : செயலியில் இனி நாளை முதல்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..
தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதால்தான் பெரிய பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. மக்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள், உங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம். தமிழ்நாடு காவல்துறை மீது மக்கள் நன்மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது. நமது காவல்துறை என்பது நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள காவல்துறைக்கு முன்மாதிரியான காவல்துறை. பொது அமைதியா காப்பது, குற்றங்களிலிருந்து மக்களை காப்பது, சட்டங்களை காப்பது காவல்துறையின் கடமையே ஆகும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்