தமிழகத்தில் 2020 - 2021 ஆண்டைவிட 2021 - 2022 ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2020 - 2021 ல் 20.36 லட்சம் ஹெக்டர் நெற்பரப்பு இருந்த நிலையில், இந்தாண்டு 22.05 லட்சம் ஹெக்டராக அதிகரித்துள்ளதாகவும், அதேபோல், 2020 - 2021 ல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், இந்தாண்டு 1. 22 கோடி மெட்ரிக் டன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


கடந்த 20 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் நெல்பரப்பு மற்றும் நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளில் இந்த சாதனை படைத்ததாக தமிழ்நாடு தகவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தூர்வாரும் பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாலும் நெல் பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.