அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை.. காரணம் என்ன..? காவல்துறை விசாரணை!

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள வீட்டில் தமிழ்நாடு அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மூத்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Continues below advertisement

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள வீட்டில் தமிழ்நாடு அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மூத்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கீழ்பாக்கம் ஆயிஷா மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

கடந்த சில நாட்களாகவே சேகர் பாபுவின் சகோதரர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், அதன் அதற்கான முழு காரணம் என்னவென்று தெரியவில்லை. 

நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு சேகர் பாபுவின் சகோதரர் தேவராஜ் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவராஜ் தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு அவரது இல்லத்திற்கு ஓடிவந்த அமைச்சர் சேகர் பாபு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் நேரில் வந்து ஆறுதல் கூறினார். 

Continues below advertisement