தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே. என். நேரு, "தெரு நாய்கள் பிரச்சனை நிறைய வருகிறது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் சரியாக கையாள காரணத்தால் பிரச்னை வருகிறது.
மாநகராட்சியில் அதிகரிக்கப்படும் வார்டுகளின் எண்ணிக்கை: வளர்ப்பு நாய்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 78 பயிற்சி பெற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் அதிக கவனம் எடுத்துள்ளோம். நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, மக்களை பாதுக்காக்கும் பணியை அரசு எடுக்கும்.
அதேபோல், மாடுகள் முதல் முறை பிடித்தல் 5000 ரூபாய், இரண்டாம் முறை பிடிக்கப்பட்டால் 10000 ரூபாய் அபராதம், மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்"
சென்னை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவிப்ப வெளியிட்ட அமைச்சர் நேரு, "சென்னையில் 200 வார்டுகளில் 89 லட்சம் மக்கள் உள்ளனர். சென்னையில் மேலும் 200 முதல் 300 வார்டுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளன.
அமைச்சர் கே.என். நேருவின் முக்கிய அறிவிப்புகள்: எனவே புதிகாக 75 கோடி ஒதுக்கீட்டில் புதிய மாமன்ற கட்டிடம் கட்ட முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார். தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.
தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159 ஆக உயரும். 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில், அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். மாடுகள் முதல் முறை பிடித்தல் 5000 ரூபாய், இரண்டாம் முறை பிடிக்கப்பட்டால் 10000 ரூபாய் அபராதம், மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டால்
பறிமுதல் செய்து ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்றக்கூடும் ரூபாய் 75 கோடி மதிப்பீடு கட்டப்படும். தெரு நாய்கள் பிரச்சனை நிறைய வருகிறது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் சரியாக கையாள காரணத்தால் பிரச்சனை வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் டவர் பூங்கா பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்" என்றார்.
சென்னையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களின் பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் நாய் கடி சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நேற்று கூட, மாங்காடு அருகே 11 வயது சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்தது.
இதையும் படிக்க: Chengalpattu Railway Station: படுஜோராக மாறும் செங்கல்பட்டு ரயில் நிலையம்..என்னென்ன வசதிகள் தெரியுமா ? பணிகள் தீவிரம்