தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.


தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 


10.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


11.05.2023 முதல் 13.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


அந்தமான் கடல் பகுதிகள்: 


10.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  


11.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:


10.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  


11.05.2023 அன்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும்,


12.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


13.05.2023 அன்று சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 


10.05.2023 மாலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும்,  


11.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும்,


12.05.2023 & 13.05.2023 அன்று மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 


10.05.2023 மாலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும்,  


11.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும்,


12.05.2023 & 13.05.2023 அன்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.