நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்து வருகிறது.


வாக்குப்பதிவில் முன்னிலை வகிக்கும் தர்மபுரி


5 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 63.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 67.52 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.


குறைந்தபட்சமாக, தென் சென்னை தொகுதியில் 57.04 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சேலத்திற்கு அடுத்தபடியாக நாமக்கல் தொகுதியில் 67.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 


தென் சென்னை தொகுதியில் 57.04 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 59.82 சதவிகித வாக்குகளும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் 61.74 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 64.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.


மற்ற தொகுதிகளின் நிலவரம்:


அதேபோல் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 61.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 67.37 சதவீத வாக்குகளும் சிவகங்கை தொகுதியில் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அரக்கோணத்தில் 65.61 சதவிகித வாக்குகளும் ஆரணி தொகுதியில் 54.46 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. சிதம்பரம் மக்களவை தொகுதியில் 54.66 சதவிகித வாக்குகளும் கோயம்புத்தூர் தொகுதியில் 47.03 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.


கடலூரில் 51.16 சதவிகித வாக்குகளும் சேலத்தில் 53.22 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. 5 மணி நிலவரப்படி, திண்டுக்கல்லில் 64.34 சதவிகித வாக்குகளும் ஈரோட்டில் 64.5 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.


கன்னியாகுமரியில் 62.82 சதவிகித வாக்குகளும் நாமக்கல் தொகுதியில் 67.37 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மதுரையில் 46.26 சதவிகிதமும் மயிலாடுதுறையில் 50.91 சதவிகித வாக்குகளும் நாகப்பட்டினத்தில் 52.38 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.


நீலகிரி தொகுதியில் 53.02 சதவிகித வாக்குகளும் பெரம்பலூர் தொகுதியில் 58.74 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. பொள்ளாச்சி தொகுதியில் 53.45 சதவிகித வாக்குகளும் ராமநாதபுரம் தொகுதியில் 52.46 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. 


தென்காசி தொகுதியில் 50.71 சதவிகித வாக்குகளும் தஞ்சாவூர் தொகுதியில் 51.40 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. தேனி தொகுதியில் 51.43 சதவிகித வாக்குகளும் தூத்துக்குடி தொகுதியில் 49.38 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.


திருச்சி தொகுதியில் 49.27 சதவிகித வாக்குகளும் திருப்பூர் தொகுதியில் 54.41 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. வேலூர் தொகுதியில் 51.12 சதவிகித வாக்குகளும் விருதுநகர் தொகுதியில் 52.47 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.