TN Local Body Election Results 2021 LIVE: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
TN Local Body Election Results 2021 LIVE Updates: 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியது.
தாம்பரத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்ட பத்திரிக்கையாளர்களை அதிகாரிகள் ஒருமையில் பேசியதால் பத்திரிக்கையாளர்கள் ஆத்திரம்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு - 1வது வார்டு திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கருணாகரன் 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மாமண்டூரில் இரண்டாவது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம்(Vijay Makkal Iyakkam) சார்பில் போட்டியிட்ட லோகநாதன் என்பவர் வெற்றி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் வெற்றி
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ருத்திரகோடி என்பவர் 1674 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மாமண்டுர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி 4வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் என்பவர் வெற்றி.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு 16 வார்டுகள்:
1வது வார்டு திமுக வேட்பாளர் ஏழுமலை வெற்றி
2 வது வார்டு திமுக வேட்பாளர் ஜனனி வெற்றி
3வது வார்டு அதிமுக வேட்பாளர் குணசேகரன் முன்னிலை
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடமயிலை-மயிலை 8வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் கருப்பையா 600 வாக்கு வித்யாசத்தில் திமுக வெற்றி
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பதிவான வாக்கு சீட்டு ஒன்றில், அதிமுகவுக்கும், தனியாக போட்டியிட்ட பாமகவிற்கும் இரு ஓட்டுகளை ஒருவர் செலுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. கூட்டணி பிரிந்தது தெரியாமல், ஒரே சீட்டில் இரு ஓட்டுகளை போட்ட அந்த ஓட்டு, செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மொத்தம் 22: பெருநகர், இளநகர், களியாம்பூண்டி ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை.
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் 4வது வார்டு பகுதிக்கு கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று போடிநகராட்சி அலுவலகத்தில் இயங்கிவரும் போடிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணிக்கை காலை 8மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. மூன்று நபர்கள் போட்டியிட்டதில் பெருமாள் என்பவர் 103 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். மொத்தம் பதிவான 254 வாக்குகளில் 103 வாக்குகள் பெற்று 4வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்மனி என்பவர் 52 வாக்குகளும், ராஜாராம் என்பவர் 99 வாக்ககளும் பெற்று தோல்வி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் தேர்தல்
முதல் சுற்று முடிவில்
திமுக சந்திரலீலா 3220
பாரதிய ஜனதா சுதா 688
கனகலட்சுமி நாம் தமிழர் கட்சி 1166
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் 1வது வார்டு வாக்கு எண்ணிக்கை:
அதிமுக 571
திமுக 301
1வது சுற்று நிலவரப்படி அதிமுக முன்னிலை
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் 3 வது வார்டு முதல் சுற்று:
அதிமுக குணசேகரன் முன்னிலை. காங்கிரஸ் பின்னடைவு.
குன்றத்தூரில் நான்கு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வசதிகள் கேட்டு அதிகாரிகள் போராட்டம் நடத்திய நிலையில், சமரசம்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் 1 வது வார்டு திமுக வேட்பாளர் கோமதி பிச்சைமுத்து வெற்றி
திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 460 வாக்குகள் பதிவான நிலையில் 459 வாக்குகள் மட்டுமே இருப்பதால் எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் மாவட்டம் காணை ஊராட்சி அறிஞர் அண்ணா கலை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வந்த ஒரு வாக்கு சீட்டில் அனைத்து கட்சியிலும் வாக்களித்திருந்தார் ஒரு வேட்பாளர். அந்த செல்லாத ஓட்டு தற்போது வெளியாகியுள்ளது.
தாம்பரம் வாக்கு எண்ணிக்கை மையத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் சின்னையாவின் வீடு உள்ளது. அங்கு அதிமுகவினர் கூடியதால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு நெல்வாய் பகுதியிலுள்ள ஏ.சி.டி தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணப்படுகிறது. 58-ஊராட்சிகளுக்கு 6- சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்பொழுது வாக்கு எண்ணிக்கை அறையில் அரசு அதிகாரிகள் தூங்கிக்கொண்டிருக்கும்போட்டோ வெளியாகி உள்ளது. பூத் ஏஜெண்டுகள் அவர்கள் முன்னாள் அமர்ந்திருக்கும் காட்சியும் அதில் உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தபால் வாக்கு நிலவரப்படி
திமுக 17
அதிமுக 1
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மட்டும் 18 வார்டுகள் உள்ளன.
18 இல் 17 இல் திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில்
தபால் ஓட்டு
மொத்த ஓட்டு -341
310 வாக்குகள் செல்லாத வாக்குகள்
31- வாக்குகள் ஏற்கப்பட்டன
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு என்ன பட்ட தபால் ஓட்டுகளை நிலவரம்
திமுக-19
அதிமுக-5
பாமக-5
மற்றவை -2
மொத்தம்-31 பதிவான வாக்குகள்
மாவட்ட கவுன்சில் தபால் ஓட்டு நிலவரப்படி திமுக முன்னிலை
விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் 4வது சுற்று முடிவு:
ADMK - 206
DMK - - 268
Ammk - 10
NT K - 03
செல்லாதவை - 09
திமுக வேட்பாளர் ஜெயா 576 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி 1 வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் 2வது சுற்று முடிவில்
திமுக - 849
அதிமுக - 78
அமமுக - 19
வித்தியாசம் -771 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அம்மு முன்னிலை
காஞ்சிபுரம் இரண்டாவது வாட்டு காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் வனிதா மகேந்திரன் முன்னிலை
காங்கிரஸ் 50
பாமக 32
அதிமுக 32
நாம் தமிழர் 4
Invalid 11
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் , காஞ்சிபுரம் ஒன்றாவது வார்டு உறுப்பினர் விஜயலஷ்மி ஜெகநாதன்
என்பவர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஆனால் வாக்கு எண்ணும் பகுதியில் மாம்பழம் சின்னம் இல்லாததால் பாமகவினர் வாக்குவாதம். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் உடனடியாக பெட்டியில் மாம்பழ சின்னம் ஒட்டினர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இதுவரை திமுகவின் 9 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முன்னதாக வாக்கு எண்ணும் அதிகாரிகள் ,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி 1 வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் 2வது சுற்று முடிவில்
திமுக - 849
அதிமுக - 78
அமமுக - 19
வித்தியாசம் -771 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அம்மு முன்னிலை
கரூரில் திமுக - அதிமுக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் மேஜைகளில் அட்டவணை வரிசைப்படி பெட்டிகளை அமைக்கவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டினர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்
மாவட்ட வார்டு உறுப்பினர்
தபால் ஒட்டு
மொத்த ஒட்டு - 145
திமுக - 102
அதிமுக - 16
பாமக 12
நாம் தமிழர் - 3
செல்லாத ஒட்டு - 12
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் உள்ளே அனுமதிப்பதில் பிரச்சனை எழுந்தது. போலீஸாருக்கும் முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கதவுகளை உடைத்து உள்ளே வந்த முகவர்கள். தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
திரிசூலம் ஊராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் இடத்தில் இருந்த முகவர்கள், அதிகாரிகள் தங்களை ஆடுமாடுகளை போல் நடத்துவதாக கூறி கூச்சலிட்டனர். போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், திமுக முன்னிலை பெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் 2, ஒன்றிய கவுன்சிலர் 5 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
தாம்பரத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என்று கூச்சலிட்டு வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான இட வசதியும், இதர வசதிகளும் செய்து தரப்படாததால் தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெறவில்லை.
வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு உணவு தாமதமாக வினியோகிக்கப்பட்டதால் இன்னும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லவில்லை. இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்கள் போராட்டம். உணவு, கழிவறை,குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறி தேர்தல் பணியாளர்கள் வாக்கு பெட்டியை திறக்க மாட்டோம் என போராட்டம்.
திருபெரும்புதூர் ஒன்றியத்தில் இதுவரை வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை. அதற்கான காரணத்தை இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
மரக்காணத்தில் நீண்ட நேரத்திற்கு பின் ஸ்டாக் ரூம் திறக்கப்பட்டது. அங்குள்ள வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கான தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் இருவர் முன்னிலை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்காக அனைத்து வேட்பாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ,வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை முதல் கட்டத்தில் 66 சதவீத வாக்கு, 2வது கட்டத்தில் 75 சதவீத வாக்கு பதிவானது. மாவட்டம் முழுவதும் 8 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3500க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர். 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுமட்டுமின்றி, அனைத்து வாக்கு எண்ணும் அறையிலும் 747 சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்படும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்ததோ, அதைவிட ஒரு படி அதிக நடவடிக்கைமற்றும் ஏற்பாடுகளை இந்த வாக்கு எண்ணும் நாளில் செய்திருக்கிறோம்.
குறிப்பாக ஒவ்வொரு கிராம வார்டு பஞ்சாயத்து உறுப்பினர்களில் இருந்து, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வரை 4 பதவிகளுக்கு அவர்களை கவுன்டிங் ஏஜென்ட்களுக்காக வெவ்வேறு நிறத்தில் அனுமதி சீட்டு வழங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி ஊடக துறையினருக்கும் தனி அடையாள சீட்டு வழங்கியுள்ளோம். போலீஸ் பாதுகாப்பை பொறுத்தவரை ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க இருக்கிறோம். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்கள் வெளியில் காத்திருப்பு: அவர்களுக்கு போதிய இடம் ஒதுக்காததால் இன்னும் அவர்கள் மையத்திற்குள் செல்லவில்லை. இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக வாய்ப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 145 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஒருவரும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒருவரும் , உத்தரமேரூர் ஒன்றியத்தில் இருவரும் கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர சோதனைக்கு பின் வாக்காளர் எண்ணும் பணியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு முறையாக உணவு வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யாததால் , வரிசையில் முண்டியடித்துக் கொண்டு சமூக இடைவெளி இன்றி உணவைப் பெற்று வரும் வாக்கு எண்ணும் அதிகாரிகள்.
நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக 2917 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலிலும் தபால் வாக்குகள் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்
வாக்கு எண்ணிக்கைகளை அந்தந்த மையங்களில் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வேட்பாளர்களின் அனுமதிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் மட்டுமே வழக்கம் போல எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது.
Background
TN Local Body Election Results 2021 LIVE Updates:
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் 6,228 பேலீசார் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in-இல் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியது.
உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் 77.43 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -