News Today Live: காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 12 Oct 2021 04:55 PM
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில்  10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

2-18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி ? - வல்லுநர் குழு தகவல்

2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதாக மத்திய வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியானில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Background


2021ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த விருது டேவிட் கார்ட், ஜோஸ்வா அங்கிரிஸ்ட்,  கிடோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களில் டேவிட் கார்ட் கனடாவிலும், ஜோஸ்வா அங்கிரிஸ் அமெரிக்காவிலும், கிடோ இம்பென்ஸ் நெதர்லாந்திலும் பிறந்தவர்கள் ஆவர்.






 



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.