தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கதவனையை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


 




சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு  கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர்.


 


 




 


புகழூர் தாலுகாவிற்கு உட்பட்ட புகழிமலை கோவில் சமணர்கள் வந்து தங்கி பல்வேறு சேவைகளை செய்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது. இந்த மலையில் 22 சமணர் படுக்கைகளும், 7க்கும் மேற்பட்ட பண்டைய தமிழ் (பிராமி) கல்வெட்டுகளும் உள்ளன. கி.மு 1ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டுகளில், பதிற்றுப்பத்து இலக்கியத்தில் சேர மன்னர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டனர். 


பின்னர் நஞ்சை புகலூர் கிராமத்தில் கரூர் - நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 406,50 கோடி ரூபாய் மதிப்பில்,  காவிரி ஆற்றின் குறுக்கே  நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர். அதேபோல் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


 


 




இந்த ஆய்வுக் குழுவில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண