உலகம், இந்தியா, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.     


1.தமிழகம் உள்ளிட்ட 5 சட்டமன்றத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறது ABP நாடு


2. மேற்கு வங்கத்தில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எட்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது 


3. நேற்று நடைபெற்ற  ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில்  ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


4. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஜூலை 31ஆம் தேதிவரை மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பின் விவரம், நேற்று உச்சநீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 



மேற்கு வங்கத்தில் 8ம கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது


 


 


5. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பாக கோவிட் பரிசோதனை செய்ய சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.



 


6. வருகின்ற 1 மே 2021 முதல் மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காகக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதால் முன்னேற்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வழியாக ஒன்றைரைக் கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன


7. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று தமிழக  அரசு தெரிவித்தது. மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும்வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்படடது. 


8. 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யப்படும் கோவின் இணையதளத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 7 வரை நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்ததாக மத்திய அரசு தெரிவித்தது.



 


9. கோவிட்-19 பெருந்தொற்று நிலைமை குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார். ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். 


10. 15 சதவீதத்துக்கும் மேல் தொற்று பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.