• TN Rain Alert: மழைக்கு ரெடியா மக்களே.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?


இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 

 



  • Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..


சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து மனுதாரர் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ““இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள்  `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் படிக்க



  • Chennai Nellai Vande Bharat: பஸ் டிக்கெட்டை விட கம்மி! சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை இவ்வளவுதானா?


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. மேலும் படிக்க  



  • CM MK Stalin Speech: பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!



சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், “சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பணி திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது திட்டக்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.  நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிகுந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர். செலவினத்தின் அடிப்படையில் இல்லாமல் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் திட்டங்களை அளவிட வேண்டும்” என்று கூறினார். மேலும் படிக்க 



  • Durai murugan On Cauvery: காவிரி நீர் விவகாரம் - பேச்சுவார்த்தை நடத்தினால் உரிமைகள் பறிபோகும் - அமைச்சர் துரைமுருகன்


சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளுக்கு  தண்ணீர் வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இருக்கின்ற தண்ணீரில் தமிழ்நாட்டிற்கான பங்கீட்டை வழங்க வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் படிக்க