• TN Rain Alert: உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய மழை நிலவரம் இதோ..


நேற்று (24.07.2023) மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (25.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில்  நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-to-occur-in-7-districts-of-tamil-nadu-today-according-to-the-meteorological-department-131031/amp



  • Medical Counselling: தொடங்கியது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.. எத்தனை இடங்கள்.. முழு விவரம் இதோ..


எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம், சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 27,28 தேதிகளில் நேரடியாகவும் நடைபெறுகிறது.  2023 – 2024 ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/general-category-counseling-for-mbbs-bds-medical-courses-has-started-today-will-continue-until-july-31-130993/amp



  • Fisherman Association Meeting: மீனவர் சங்க மாநில மாநாடு.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.. எங்கே எப்போது? விவரம் இதோ..





தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-will-participate-in-the-state-conference-of-fishermen-s-associations-to-be-held-on-august-18-in-ramanathapuram-131017/amp



  • Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!





தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022 ம் ஆண்டு மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வு இன்று (25.07.2023) முதல் அமலுக்கு வந்துள்ளது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/milk-products-priced-at-rs-20-to-rs-100-has-been-ordered-by-administration-of-aavin-130998/amp

 



பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசு தனது 85 வது பிறந்தநாளை இன்று  கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாசு அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-wished-pmk-founder-ramadoss-on-behalf-of-his-85th-birthday-in-twitter-130982/amp