Kalaignar Womens Assistance Scheme: வந்தது அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகைக்கு இது கட்டாயம்... தமிழ்நாடு அரசு சொல்றத கேளுங்க!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன் அடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். வரும் 17ஆம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/kalaignar-womens-assistance-scheme-tamil-nadu-government-has-announced-that-fingerprint-registration-is-mandatory-128414/amp
TN Rain Alert: வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. லேட்டெஸ்ட் அப்டேட் இதோ..
12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-to-occur-in-8-districts-of-tamil-nadu-today-according-to-the-meteorological-department-128407/amp
Uniform Civil Code: "பொது சிவில் சட்டம் சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும்; மதச்சார்பின்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்" - திமுக
பொது சிவில் சட்டம் குறித்து இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள விரிவான பதில் குறித்து இங்கு காணலாம். தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை ஆதரித்து வந்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/uniform-civil-code-will-disenfranchise-minorities-undermine-secularism-dmk-128391/amp
ADMK Jayakumar: மன்னிப்புக் கடிதம் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
அதிமுகவில் ஒருவரை இணைப்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார் என்பது அதிமுகவில் முன்பிருந்தே இருக்கிறது. அதன் அடிப்படையில் தான், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மன்னிப்பு கடிதம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு பொருந்தாது. மற்றவர்கள் யார் வந்தாலும் நாங்கள் இணைத்துக்கொள்வோம் என ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/apology-letter-not-applicable-to-ops-dtv-sasikala-to-rejoin-aiadmk-says-ex-minister-jayakumar-128390/amp
EPS: மாநில சுயாட்சி.. திராவிட மாடல் போன்ற உருட்டுகள் எதற்கு? - முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் விசாரணையே தொடங்கப்படாத நிலையில், அவர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், முதலமைச்சர் தனது குடும்பம் மற்றும் செந்தில் பாலாஜி மீது உள்ள குற்றங்களை மறைக்க மாநில சுயாட்சி, திராவிட மாடல், ஆளுநருடன் மோதல் போன்ற உருட்டுகளை நடத்துவது, தன்னை உத்தமர் போல காட்டிக்கொள்ளவா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/leader-of-opposition-edappadi-palaniswami-has-given-strong-criticism-to-tamil-nadu-chief-minister-128362/amp