Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர். 


சென்னை மெட்ரோ ரயில் சேவை:


சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர்.  தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பயணிகள் நடந்து வருகிறது.


ஜூலை  மாதம்:


சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும்; மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் பயணிகளும் மார்ச் மாதத்தில் 63,69,282 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 69,99,341 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் அதிகபட்சமாக 28.07.2023 அன்று 3,08,495 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2003, ஜூலை மாதத்தில் மட்டும் க்யபூர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 29,10,875 பயணிகள் பயண அட்டைகளை Travel Curd Ticketing System) பயன்படுத்தி 48,85,843 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,97,348 பயணிகள், குழு பயணச்சீட்டு (group Ticket) முறையை பயன்படுத்து 5,382 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை கட்டையை (தேசிய பொது இயக்க சட்டை பயன்படுத்தி 1,54,244 மெட்ரோ ரயில்களில் பயனம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணசீட்டு மற்றும் பல அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.