- Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் - எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளிலேயே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க
- நடைமுறை எதார்த்தம் புரியாதவர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன் பதிலடி
பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி சொல்லியுள்ளார். மேலும் படிக்க
- TN Fishermen Arrest: விடாது தொடரும் அவலம் - மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
மார்ச் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 58 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 விசைப்படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்க கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க
- Lok Sabha election 2024: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாளாகும். எனவே 18 வயது நிறைவடைந்தவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று கடைசி நாள், எனவே இப்போது கூட விண்ணப்பிக்கலாம். வயதானவர்களுக்கு ஏதுவாக வீட்டிலிருந்தே வாக்களிக்க, 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் படிக்க
- Paytm Fastag: வாகன ஓட்டிகளே..! பேடிஎம் ஃபாஸ்டேக் டைம் ஓவர்..! வேறு வங்கிக்கு மாறுவது எப்படி?
விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், Paytm Payments வங்கி இனி தனது சேவைகளை தொடர முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேடிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சேவை கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் படிக்க