TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.


தமிழக மீனவர்கள் கைது..!


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 விசைப்படகுகளுடன்  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்க கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 58 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


ஸ்டாலின் கண்டனமும், கைதும்:


 தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்பிரச்னைகளுக்கு தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம்” என ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள்: Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா - மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - பங்கேற்கிறார் ஸ்டாலின்


தொடரும் கைது நடவடிக்கைகள்:



  • கடந்த 13ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 15 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்

  • மார்ச் மாதம் 10ம் தேதி 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • பிப்ரவரி மாதம் 21ம் தேதி இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த  ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

  • பிப்ரவரி 4ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை கைது செய்து 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணக்குப் பிறகு 20 பேர் விடுவிக்கப்பட்டு 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

  • கடந்த ஜனவரி 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

  • புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. 

  • கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

  • 2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.