நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 


அதில், மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன் பெற்றது தமிழ்நாடு மாநிலம்தான் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தது.


காப்பீடு திட்டத்தில், 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 682 மீனவர்கள் பயனடைந்தனர் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. அதில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.


நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்  ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்


கூட்டத்தொடரின் முதல் அமர்வு13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்நிலையில், இன்று மீனவர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீடு குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.