விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் மணிகண்டன் (வயது 29). டிப்பர் லாரி டிரைவரான இவர் பிளஸ்-1 படித்து வரும் 16 வயது மாணவியை அந்த பகுதியில் உள்ள முள் தோப்புக்கு அழைத்து சென்றார். பின்னர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை அவரிடம் காண்பித்து ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுபற்றி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்/து விசாரணை நடத்தி வருகிறார்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்