குமரிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தந்தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (02.02.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று (03.02.2023) தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக,
03.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
05.02.2023 முதல் 07.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 16, நாலுமுக்கு (திருநெல்வேலி) 13, காக்காச்சி (திருநெல்வேலி) 12, மாஞ்சோலை (திருநெல்வேலி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 10, நன்னிலம் (திருவாரூர்), நாகப்பட்டினம், திருவாரூர் தலா 9, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 8, மன்னார்குடி (திருவாரூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), கொடவாசல் (திருவாரூர்), தென்பதி (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை) தலா 7, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), காரைக்கால், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தஞ்சாவூர், பாண்டவையார் (திருவாரூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), மணமேல்குடி (புதுக்கோட்டை), கிளானிலை (புதுக்கோட்டை) தலா 6, பேராவூரணி (தஞ்சாவூர்), நாகுடி (புதுக்கோட்டை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மீமிசல் (புதுக்கோட்டை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அரிமளம் (புதுக்கோட்டை), கறம்பக்குடி (புதுக்கோட்டை), குருங்குளம் (தஞ்சாவூர்), மலையூர் (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
03.02.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.02.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.