தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
05.04.2023 மற்றும் 06.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
07.04.2023 முதல் 09.04.2023 வரை:  தென் தமிழக மாவட்டங்கள், வடஉள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
ஆயிக்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 5, மானாமதுரை (சிவகங்கை) 4, நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பொன்னணியாறு அணை (திருச்சி), தேக்கடி (தேனி), சாத்தூர் (விருதுநகர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஏற்காடு (சேலம்) தலா 3, க்ளென்மார்கன் (நீலகிரி), திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மூலனூர் (திருப்பூர்), வம்பன் Agro  (புதுக்கோட்டை) தலா 2, மீமிசல் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), தனிமங்கலம் (மதுரை), நகுடி (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), நடுவட்டம் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கோவில்பட்டி (திருச்சி), தென்காசி, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தேவகோட்டை (சிவகங்கை), அமராவதி அணை (திருப்பூர்), கழுகுமலை (தூத்துக்குடி), மேலூர் (மதுரை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தொடர்ந்து ஈரோட்டில் 4 நாட்களாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி செல்சியஸும் , பாளயங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸும், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளார்கள்.