மழைக்கு வாய்ப்பு:


மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.






சென்னை:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மழை அளவு:


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. 






மீனவர்களுக்கு எச்சரிக்கை:


தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு காற்றின் வேகமானது 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை  இருக்க கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.






Also Read: திருவொற்றியூர் : வகுப்பறைகளில் கசிந்த மழை நீர்... சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை..


Also Read: Chennai Rains: திடீரென சென்னையைச் சூழ்ந்த கருமேகங்கள்! சட்டென மாறிய வானிலை.. வெளுத்த மழை!!


 






மேலும் செய்திகளை காண, 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண