• பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
  • "இந்தியாவில் நம்பர் 1 மாநிமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • கடலூரில் வண்டிகேட் பகுதியிலுள்ள உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையாக அங்கே உணவருந்திய கர்ப்பிணி, சிறார் உட்பட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர்.
  • கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
  • பத்மபூஷன் விருதைப் பெற்ற நடிகரும், ரேஸருமான அஜித்குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • கஞ்சா விவகாரத்தில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீநாத் பாசி, மாடல் அழகி சவுமியா ஆகியோரிடம் கலால்துறை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71,840க்கும் கிராம் ரூ.8,980க்கும் விற்பனையாகிறது.
  • தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.