அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி ரமணா மீதான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்கூட்டியே விடுவிக்க கோரி தமிழக அரசு அனுப்பிய 165 ஆயுள் தண்டனை கைதிகள் அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
TN Governor: பச்சைக்கொடி காட்டிய ஆளுநர்.. சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..
ஆர்த்தி | 20 Nov 2023 02:15 PM (IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி ரமணா மீதான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி