IPS Reshuffle: இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு  பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில் தற்போது, இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  பிருந்தா, ஜமன் ஜமால் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. 


2 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:



  • பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. பிருந்தா, பதவி உயர்வுடன் சேலம் வடக்கு நகர காவல் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

  • சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி ஜமன் ஜமால், பதவி உயர்வுடன் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


பணியிட மாற்றம்:


மேலும், சில அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,



  • சென்னை ரயில்வே காவல் எஸ்.பியாக சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கவுதம் கோயல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

  • தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டன்ட்டாக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். 


தொடரும் நடவடிக்கைகள்:


கடந்த வாரம் கரூர், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், வணிக வரித்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோரும் மாற்றம் செய்யப்பட்டனர்.


அதற்கு முன்னதாக, திருவாரூர், தென்காசி, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட  16  ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில்  குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டிஜிபியாக இருந்த கே.வன்னிய பெருமாள் , தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி,  சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக இருந்த மகேஷ்வரி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி திஷா மித்தல் ஆகியோரும் அடங்குவர்.




மேலும் படிக்க


Diwali Special Buses: தீபாவளி சிறப்பு பேருந்துகள்; முன்பதிவு முதல் ஊர் திரும்புவது வரை - முழு விவரம் விரிவாக உள்ளே