சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அரியர் தேர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு முன்பாக, அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை தொடர்பாகவும், தடுப்பூசி தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.




இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாவும், 2-வது அலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்கமுடியவில்லை எனவும் பதிலளித்தார். 




 


மேலும், தமிழ்நாட்டில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் கையில் இருப்பதாகவும், விரும்பினால்  40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாகவும் கூறினார். ஏற்கெனவே 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும்  நிலையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.