2025 - 2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து சொல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை உழவன் செயலி மற்றும் இமெயில் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் tnagribudget2025@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி 2021-2022ம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை வரும் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் சட்டப்பேரவையில் 5வது முறையாக தாக்கல் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மண்ணை பொன்னாக மாற்றும் நம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, 2025 – 2026ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதி நிலை அறிக்கை மார்ச் -15ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களது கருத்துக்களை உழவன் செயலி மற்றும் இமெயில் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.