முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் நளினி.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 27-ம் தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
பரோல் நீட்டிப்பு:
அதன் தொடர்ச்சியாக 8 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் நளினி சிறைக்கு திரும்ப இருந்தார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா, நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அதனை தொடர்ந்து 9-வது முறையாக மேலும் 30 நாட்கள் அடுத்த மாதம் வரை பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
நிபந்தனை:
பரோலில் வெளியே உள்ள, நளினி அச்சு / காட்சி ஊடகங்களுக்கு எந்த பேட்டி கொடுக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது, குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெளியில் செல்லக்கூடாது, வெளியாட்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், அருகில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் சென்று கையெழுத்து இட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also read: Vijay Sethupathi: உச்சநீதிமன்றத்திற்கு சென்ற விஜய்சேதுபதி..! உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு..! நடந்தது என்ன..?