தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.


முழு ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி மற்றும் தடை குறித்த விவரங்களை பார்க்கலாம்.


எதற்கெல்லாம் அனுமதி


 * உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி


* ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.


* உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி


* நாளையும், வார நாட்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி.


* திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி.


* பால், பேப்பர் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி


* போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு அனுமதி


* விமானம் மற்று ரயில் நிலையம் நிலையங்களுக்கு வாடகை மற்றும் சொந்த வாகனங்கள் பயன்படுத்த அனுமதி


எதற்கெல்லாம் தடை மற்றும் இயங்காது


* பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது


* மின் வணிக நிறுவனங்கள் செயல்பட தடை 


* அத்தியாவசிய பணியாளர்களுக்காக குறைந்தளவில் மின்சார ரயில்கள் இயங்கும்


* ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது


* மார்க்கெட், பீச், பார்க், மால்கள் இயங்காது


* வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு தடை


முழு ஊரடங்கையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேவையின்றி வெளியில் ஊர்சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண