தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு சிறப்பாக உள்ளதற்கு சான்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய தரவரிசைப் பட்டியலின் படி 100 சிறந்த கல்லூரிகளில், தமிழ்நாட்டிலிருந்து 30 கல்லூரிகள் தேர்வாகியிருக்கிறது என்பதை குறிப்பிட்டு ஆளுநரின் சர்ச்சையான விமர்சனத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 


ஆளுநர் ஆர்.என். ரவி  பேச்சு:


நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல்,  "நம் மாநிலத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்களை சென்று சந்திப்பதாலோ அல்லது பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிட மாட்டார்கள்" என்றும் பேசியிருந்தார். சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பயணம் மேற்கொண்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி-ன் கருத்து பரபரப்பை எழுப்பியிருந்தது.




அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களையும், அரசு பற்றி எதிர்மறையாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார் என குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு. ”ஆளுநர் தொடர்ந்து உண்மைக்கு முரணாக கருத்துக்களையும், அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்களையும் பேசி வருகிறார்.” என்று தெரிவித்தார். மேலும், "கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை!" என்றும் பேசியுள்ளார். 


தொழில் முதலீட்டார்களோடு பேசுவதால் மட்டுமே முதலீட்டாளர்களை ஈர்த்து விட முடியாது என்று சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி துணைவேந்தர்கள் மாநாட்டை தனது அரசியலுக்காக பயன்படுத்தி கொண்டார்


தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் சில பிரச்ச்னைகளில் ஆளுநர் தெரிவித்த கருத்து அவருக்கு எதிராக அமைந்தது. இதை திசை திருப்புவதற்காகவே இவ்வாறாக செயல்படுகிறார் என்று ஐயுறுகிறேன். 


திசை மாற்ற முயற்சி


சிதம்பரத்திலே தீட்ஷிதர்கள் பாலிய விவாகம், இளம் வயது விவாகம்  இல்லை என்பதற்கு மாறாக சமூக நலத்துறை அவர்கள் மீது வழங்கு தொடர்ந்து கொடுமைப்படுத்துவாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 


ஊடகங்கள் திருமணங்கள் நடத்திருப்பதை ஊடங்களில் வரும் காட்சிகள் உறுதி செய்துள்ளன. இதை திசை திருப்புவதற்காகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 


கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம்:


” ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு; புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு.’ என்று போற்றப்படும் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் அறியவில்லையோ, அல்லது அறிந்தும் அறியாதவர் போல இருக்கிறாரா என்பது தெரியவில்லை. 


நேற்று வெளியான NIRF தரவரிசைப் பட்டியலின் படி. இந்தியாவிலே இருக்க கூடிய 100 பல்கலைக்கழங்கள் தரவரிசையில், அதில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. டாப் 100-ல் 30 கல்லூரிகல் தமிழ்நாட்டிலே இருக்கின்றன. நிதி ஆயோக் வெளியிட்ட தகவலிலும் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 18 - வது இடத்தில் உள்ளது. சென்னைப்  பல்கலைக்கழகம் 68-வது இடம். தமிழ்நாடு கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


2021-22ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை. 


முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதலமைச்சர் மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.