தமிழ்நாடு மின்சார வாரியம்‌ பொது மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், வாட்ஸ் அப் எண்களில் தெரிவிக்கலாம். இதற்கான மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  


இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்‌ தெரிவித்து உள்ளதாவது:


உங்கள்‌ பகுதியில்‌ உள்ள மின்சார வாரியம்‌ சம்பந்தப்பட்ட புகார்களை இனி வாட்ஸ்‌ ஆப்‌ களில்‌ தெரிவிக்கலாம்‌ என்று மண்டலங்கள்‌ வாரியாக எண்களை அறிவித்துள்ளது. அனைத்து எண்களுக்கு முன்பும் 0991 என்ற எண்ணைச் சேர்க்கவும்‌. 


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ்‌ ஆப்‌ எண்‌ : 0091 89033 31912


* காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளுர்‌ மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ்‌ ஆப்‌ எண்‌ : 0091 9444371912


* விழுப்புரம், கடலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ்‌ ஆப்‌ எண்: 0091 94458 55768


* சேலம்‌, ஈரோடு, நாமக்கல்‌ மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ் ஆப்‌ எண்‌: 0091 94458 51912


* மதுரை, திண்டுக்கல்‌, தேனி, ராமநாதபுரம்‌, சிவகங்கை மாவட்டங்களின்‌ புகார்களுக்கு 0091 9443111912


* திருச்சி, தஞ்சாவூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, நாகப்பட்டினம், கரூர்‌ மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ்‌ ஆப்‌ எண்‌:  0091 9486 111912


* கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின்‌ புகார்களுக்கு வாட்ஸ் ஆப்‌ எண்‌:0091 9442111912 


* சென்னை மாவட்டம்‌ முழுவதும்‌ மின்சாரம்‌ சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் ஆப்‌ எண்‌ :0091 94458 50829


இதன் மூலம் பொது மக்கள்‌ இனிமேல்‌  இருந்த இடத்தில்‌ இருந்தே புகார்களை தெரிவிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 


மழைக் காலத்தில், மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் அசாதாரணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, மின்சார வயர்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏதேனும் அசாதாரணம் தென்பட்டால், உடனடியாக மின்சார வாரியத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.


மழைக்காலத்தில் மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி?


1. மின்சார செருகிகள் (பிளக் பாயிண்ட்கள்) அருகில் உள்ள ஜன்னல்களை மூடவும்.


2. மழை நீர் மின்சார செருகிகள் (பிளக் பாய்ண்ட்கள்) வழியாக உள்ளே புகாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.


3. மின்சார சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். 


4. மழை, மின்னல், காற்று காலங்களில் பொது மக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. 


5. மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரி செய்துக்கொள்ள வேண்டும்.


6. அறுந்து இருக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகில் செல்லக் கூடாது. மற்றவர்களையும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 


7. தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதன பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (இ.எல்.சி.பி.) நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.